பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 வீடுகள் எறிந்தன !!
பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது கூரைவீடு நேற்று நள்ளிரவு மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எறிந்தது.
தீமளமளவென பரவிஅடுத்தடுத்த ரவிச்சந்திரன், மங்கலட்சுமிஆகிய வீடுகள்தீப்பிடித்து எறிந்தது. பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

No comments:
Post a Comment