கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் ஆணைப்படி புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாள் காட்டுமன்னார்கோயிலில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ராஜ் என்கிற காசி தலைமை தாங்கினார்.
ஒன்றிய கழகச் செயலாளர்கள் மேற்கு முனைவர் பி என் ஆர் மணிமாறன் கிழக்கு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பால துரை பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு தெற்குருப்பில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் பேருந்து நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கனக சபை ஒன்றிய துணை செயலாளர் கிழக்கு அன்பழகன் மாநில மகளிர் அணி ஒன்றிய இணை செயலாளர் ஷீலா ராணி தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் விவேகானந்தன் வீராசாமி முருகானந்தம் பாலு தங்கமணி கிருஷ்ணன் மற்றும் மாவட்டம் ஒன்றிய கழக கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர்
கே பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்

No comments:
Post a Comment