கடலூரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அனுசரிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

கடலூரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அனுசரிப்பு.

கடந்த 2004 ஆம் ஆண்டு  டிசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலையால் கடலூர் மாவட்டத்தில்  சுமார் 610 பேர் உயிரிழந்தனர் 18 ஆம் ஆண்டு  நினைவு தினம்  தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டம் சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.


மேலும் கடலூர் துறைமுகம் மேம்பாலம் அருகில் இருந்து கடலூர் மாவட்ட தலைவர் எம். சுப்பராயன் தலைமையில் சோணங்குப்பம் சிங்காரத்தோப்பு அக்கரை கோரி தைக்கால் தோனி துறை சலங்குக்கார கிராமம் மற்றும் பிஞ்சம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் ஊர்வலமாக புறப்பட்டு சிங்காரத்தோப்பு  கடற்கரையில் கடலில் சுனாமியால் உயிரிழந்தவர்களை நினைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கண்ணீர் மல்க கடலில் பால் ஊற்றி மஞ்சள் தூவி கற்பூரம் ஏற்றி மண்டியிட்டு கும்பிட்டு நினைவு கூர்ந்து அழுதனர்.
மேலும் அங்கு பல பெண்கள் சுனாமியில் பரிக்கொடுத்த  தங்களது உறவுகளை நினைத்து குழுவாகவும் தனித்தனியாகவும் அழுதது காண்போரை நெஞ்சுருக்க செய்தது  குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

*/