சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் - முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அஞ்சலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் - முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் வெள்ளிக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில்  மலர் வளையம் வைத்தும்,  கடலில் பால் ஊற்றி  கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அஞ்சலி செலுத்தினார். 


இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி.ஜெ.குமார்,  மாவட்ட துணை செயலாளர் தெய்வ. பக்கிரி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் என்.வரதராஜன், இலக்கிய அணி செயலாளர் ஆர்.ஏழுமலை,  பகுதி செயலாளர்கள் வ.கந்தன், பி.கே. வெங்கட்ராமன், வழக்கறிஞர்  எம். பாலகிருஷ்ணன், 

கடலூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ப. ஆதிநாராயணன், கடலூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆர்.கே ஆர். ஜெயச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம். கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார், பகுதி கழக அவை தலைவர் கலைமாறன், பகுதி இணை  செயலாளர் இன்ப மேகம்,  பகுதி துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி பார்த்திபன்,  வார்டு செயலாளர்கள் சேகர், பஞ்சாயதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/