குமராட்சியில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சியில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் பதினைந்து ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் திருவுருவ படம் வீதி உலா புறப்பட்டு ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு ஆராதனை பூஜையம் நடைபெற்றது.
முடிவில் அனைத்து பக்தர்களும் விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்படது இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தரமூர்த்தி ரமேஷ் மணி பாலாஜி மேட்டர்மணி சரவணன் நிஷாந்த் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
கே.பாலமுருகன்
காட்டுமன்னார்கோயில்

No comments:
Post a Comment