புவனகிரி அருகே பு.கொளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன் சின்ன மருது தொடக்கி வைத்தார் !!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.கொளக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சிதம்பரம் கோட்டம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர் முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன் சின்ன மருது தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மருதூர் கால்நடை உதவி மருத்துவர் மரு. சே .கோகுல்நாத் கால்நடை ஆய்வாளர் காஞ்சனா .கால்நடை உதவியாளர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமைபற்றி விரிவான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் புரியும்படி எடுத்துரைத்தனர்.
பின்பு பொதுமக்கள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் .சிகிச்சை பணிகள் சினைப் பரிசோதனை .மலட்டு நீக்கு சிகிச்சை.LSD.அம்மை நோய் தடுப்பூசி போன்ற அனைத்து வித நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்தனர் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாய பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பயன்் பெற்றனர்.


No comments:
Post a Comment