கடலூர் துறைமுக பகுதியில் உள்ள தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 November 2022

கடலூர் துறைமுக பகுதியில் உள்ள தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது  இதனை ஒட்டி இன்று கடலூர் துறைமுக பகுதியில் உள்ள தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியை திருமதி.என். கங்காதேவி அவர்கள் தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

ஓவிய ஆசிரியர் சாமுவேல் செல்லத்துரை மற்றும் மாணவர்கள் சார்பில் தத்ரூபமாக நேருவின் உருவ மணல் சிற்பம் வெகு அழகாக பள்ளி வளாகத்தில் வடிவமைக்கபட்டிருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது மேலும் தலைமை ஆசிரியர் திருமதி .கங்காதேவி அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் மற்றும் மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி கட்டுரை போட்டி இவைகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

மேலும் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகம் மற்றும் உபகரணங்களும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன

No comments:

Post a Comment