கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வில் முன்னேற இரண்டு நாள் பயிற்சி முகாம் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை .சோற்றுக்கற்றாழை தமிழகம் ஆகியவை சார்பில் துவங்கப்பட்டது.
தற்போதைய வாழ்வியல் சூழலில் மேற்கண்ட பிரிவினரும் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமம் பட்டு வேதனைப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அருகில் கிடைக்கும் சோற்றுக்கற்றாழை மூலம் பல்வேறு பொருட்களைதயாரித்து விற்பனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது என பயிற்சியில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த பயிற்சி முகாமில் திட்ட மேலாளர் ஜெகநாதன் டி .எல். எம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மானக்ஷா சோற்றுக்கற்றாழை அய்யா, ராம சண்முகம், திட்டப் பணியாளர் நெடுஞ்செழியன் சிலம்பரசன், அப்துல்ரஷீத், ராஜஸ்ரி.பிரான்சிஸ். முத்துலிங்கம், ராஜ்குமார். மருதவாணன், மகாலிங்கம், சிவராமன், கவியரசன், ஹேமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment