கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்


கடலூர் புதுப்பாளையம் பகுதியை  சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். 

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 


சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment