ஒருங்கிணைந்த- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய கல்வி திட்டம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் துறைமுகம் தூயதாவீது மேல் நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கல்வி அலுவலர் சங்கர் உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் இவர்களின் வழிகாட்டுதலின்படி தலைமையாசிரியர் திருமதி.ந.கங்காதேவி தலைமையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கையில் வண்ணம் பூசி பதித்தல்,பல்வேறு உருவங்களை உருவாக்குதல்,ராக்கெட் செய்து விடுதல்,ஓலை பின்னுதல்,பட்டம் செய்து விடுதல்,காய்கறிகளில் பல உருவங்களை செய்தல் ஒட்டு மரங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தியதோடு இணைவோம் மகிழ்வோம் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் சமத்துவ உருவாக்கம் போன்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ந. கங்காதேவி தனது சொந்த செலவில் பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர் லீமாரோஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment