கடலூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு இணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2022

கடலூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு இணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு இணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்தது.


மாநிலங்களில் 20 வகை நிரந்தரப்பணியிடங்களை தனியாருக்கு

வழங்கிடும் அரசாணை 152-ஐ உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, ஒப்பந்த முறை, சுயஉதவிக்குழு என பல ஆண்டுகளாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்திடவேண்டும் 8 மணிநேர வேலை,பி.எப்,ஈ.எஸ்.ஐ, வாரவிடுமுறை, பண்டிகை கால விடுமுறை உள்ளிட்ட சட்ட ரீதியானஅம்சங்களை கறாராக அமுல்பட்டுத்தக் கோரியும் கடலூர் மாநகராட்சியில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்திற்கு கட்டவேண்டிய தொகை ரூ.2 கோடியே 31 லட்சத்தை உடனடியாக செலுத்திட வேண்டுமென்றும்


கடலூர் மாநகராட்சி தொழிலாகளர்களுக்கு எற்கனேவே நடைமுறையில் இருந்தவாறு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வழங்கிடுமாறும் மற்றும் தொழிலாளர்களின் தேவைக்கேற்ப விடுப்பு வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கருப்பையன் , சுப்புராயன் ஆள வந்தார் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் நிறுவனத் தலைவர் சிவராமன் சிஐடியு செயலாளர் பழனிவேல் பாஸ்கரன் ராஜேஷ் கண்ணன் திருமுருகன் சாந்தகுமாரி ராஜேந்திரன் ஆனந்த நாராயணன் ஸ்டாலின் அரசகுமரன் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment