கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது


கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார். 


கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ,புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கீ.சரவணன் முன்னாள் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் இலா.புகழேந்தி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் MRKP கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்இக்கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வருகின்ற 27ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க வலியுறுத்தியும்


திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி அவர்களே இரண்டாவது முறையாக நியமனம் செய்ததை வரவேற்கும் விதமாகவும்.


வருகின்ற 26, 27 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் முகாமில் புதிய வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை அதிக சேர்ப்பது குறித்து 


 இல்லம் தேடி இளைஞர்களை வரவேற்று திமுகவில் உறுப்பினராக சேர்த்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது


நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் துணைத் தலைவர் சுப்ராயலு நகர செயலாளர் தன.தமிழ்செல்வன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment