அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம்

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சிவகுருநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கை யில், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்த பிறகு ஆசிரியர் கள் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான நியாயமான சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

எனவே 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் கருப்பு அட்டை அணிந்து பணி புரிவது, டிசம்பர் 7-இல் மனித சங்கிலி, 14-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்துவது, 28-ந்தேதி கண்டன பேரணி நடத்தி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளிப்பது ஜனவரி 23-ந்தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது ஜன வரி 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானித்து உள்ளோம் என்றார். 


உடன் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப் பாளர் எஸ். மனோகரன், ரவி, மனோகரன், இளங்கோ, சுப்ரமணியன், பாஸ்கர், கார்த்திகேயன், செல்வராஜ், செல்லபாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

No comments:

Post a Comment