புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தும் போலீசாரின் வினோதம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தும் போலீசாரின் வினோதம்

புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தும் போலீசாரின் வினோதம். 


கடலூர் மாவட்டம் புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பகுதியில் வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வருகின்றனர் இவர்களுக்குள் மாணவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சாதியின் அடையாளங்களை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டு தேவையற்ற சச்சரவில் ஈடுபட்டு வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தியும் கட்டுப்படாமல் மாணவர்கள் தான்தோன்றித்தனமாக சுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை புவனகிரி போலீசார் வழக்கம்போல் பள்ளி துவங்குவதற்கு முன்பும் பள்ளி விட்ட பின்பும் 2 மணி நேரத்திற்கு மேல் காவல் பணியில் காவல் ஆய்வாளரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் அதேபோல் இன்று பள்ளியின் முன்பு நின்று கொண்டிருந்தபோது மாணவர்கள் ஒழுக்கமாக முடிவெட்டி கொள்ளாமல் நாகரிகமற்ற முறையில் முடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு ஒலுங்கினமாக வந்து கொண்டிருக்கும் மாணவர்களை பிடித்து 15க்கு மேற்பட்டவர்களுக்கு போலீசாரின் சொந்த செலவில் முடி வெட்டி விட்டனர் இந்த செயல் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

No comments:

Post a Comment