வடலூர் பாஜக சார்பில் மின் கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

வடலூர் பாஜக சார்பில் மின் கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

வடலூர் பாஜக சார்பில் மின் கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆவின் பால் விலை உயர்வு ,மின் கட்டணம் உயர்வு ,சொத்து வரி உயர்வை கண்டித்து வடலூர் நான்கு முறை சந்திப்பில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் வடலூர் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. 

விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது சமீபத்தில் தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்ந்த பட்டதை கண்டித்தும் , மின்சார கட்டண உயர்வை கண்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், பால் விலை ,மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜகவினர், பால் விலை உயர்வு மின்சார கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு தான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சின் சாதனை என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடலூர் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment