வடலூரில் வள்ளலார் அவதார தின விழாவை முன்னிட்டு சொற்பொழிவு மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

வடலூரில் வள்ளலார் அவதார தின விழாவை முன்னிட்டு சொற்பொழிவு மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சி

வடலூரில் வள்ளலார் அவதார தின விழாவை முன்னிட்டு சொற்பொழிவு மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. 


தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்   எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  PK.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்களின் 200வது அவதார தின விழா வினை முன்னிட்டு வடலூர் வள்ளலார் விழா குழுவினர் மற்றும் வள்ளலார் தெய்வ நிலையமும் இணைந்து நடத்திய வள்ளலார் அவர்களின் சொற்பொழிவு மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சி கடலூர் வள்ளலார் தெய்வ நிலையை வளாகத்தின் நடைபெற்றது. 


இதில்  சிறப்பு அழைப்பாளராக விழா குழுவின் தலைவரான குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட கல்விக்குழு தலைவருமான பொறியாளர் V.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார் உடன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொருளாளர் சுப்ரமணியன் வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார்  வடலூர் நகர கழக செயலாளர் தன.தமிழ்செல்வன்  விழா குழு உறுப்பினர்கள் வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள்  ராஜபூபதி, தி.பிரகாஷ், சண்.பிரபு மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்  வெற்றி, பிரகாஷ் மற்றும் நகர துணை செயலாளர் மீன்பழனி, வடலூர் நகர இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் குமார்  பேரூர் கழக செயலாளர் சங்கர்  மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கவுன்சிலர்  வன்னியர்பாளையம் பாண்டியன்  உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/