கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் புகார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 November 2022

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் புகார்.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் புகார். 


ராஜீவ் காந்தி படுகொலை குறித்து உண்மைக்கு புறம்பாக கருத்து கூறும் நளினிக்கு தடை விதிக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து உண்மைக்கு புறம்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற வகையில் கருத்து கூறிவரும் நளினி மீது வழக்கு தொடுத்து ஊடக சந்திப்பிற்கு தடைவிதிக்க கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும்  நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர். மக்கின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.நூர்அலி ஆகியோர் கையெழுத்திட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் .சக்திகணேஷ்சக்திகணேஷ் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.


அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலை சம்பந்தமான வழக்கில் நளினி பேரறிவாளன் சாந்தன் ராபர்ட் பயாஸ்  முருகன் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்கள்.


ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கும் சட்டத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் குற்றவாளிகள் அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்யவில்லை கருணை அடிப்படையில் தான் விடுதலை செய்துள்ளது.


இந்த நிலையில் முதன்மை குற்றவாளி நளினி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கிறார் அதில் பல பொய்யான தகவலை கொடுக்கிறார் நளினி தன் மீது  சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் இந்த வழக்கில் சாட்சி கூறிய ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அனுசியாவை பற்றி பொய்யான தகவலை கூறுவது வேதனை குறியது கண்டனத்திற்குரியது.

ராஜுவ்காந்தி படு கொலை குற்றத்தில் உண்மை குற்றவாளிகள் யார் மீதும் சந்தேகம் பட்டு சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு நமக்கு அது தெரியாது  அப்படி காட்டிக் கொடுக்கும் பழக்கம் கிடையாது அப்படி இருந்திருந்தால் அப்படி காட்டிக் கொடுத்திருந்தால் 32 வருடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி உண்மை குற்றவாளிகளை மறைக்கின்ற நோக்கத்தில் கூறி வருகிறார் எனவே காவல்துறை மீண்டும் அவர் மீது வழக்கு தொடுத்து விசாரிக்க வேண்டும்.

1444 சாட்சியை விசாரணை செய்து ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்தை நளினி குற்றம் சாட்டுகிறாரா? அப்படி என்றால் நீதிபதிகளெல்லாம் பொய்யானவர்களா? நீதிமன்ற தீர்ப்பெல்லாம் பொய்யானதா? நளினி தாம் குற்றமற்றவர் என்று கூறுவது பொய். நளினி விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக இல்லாமல் இருந்திருந்தால் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி 9 போலீஸ் அதிகாரிகள் 6 பொதுமக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.


 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி அமைப்பைச் சார்ந்த முருகனை திருமணம் செய்து கொண்ட நளினி ஊடகங்களுக்கு அளித்துவரும் உண்மைக்கு புறம்பாக கூறிவரும் கருத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே நளினி மீது வழக்கு தொடுத்து ஊடக சந்திப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.


புகார் மனுவின் நகல் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு  தமிழக உள்துறை  செயலாளர் பணீந்தர ரெட்டி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment