சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம். 


சிதம்பரம் அனைத்து ரோட்டரி சங்கர் சார்பில் மற்றும் மெஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவமனைத்துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் இரண்டாம் கட்டமாக எடையார் ஊராட்சி கிராமத்தில் நடைபெற்றது.


முகாமில் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் மணிகண்டன் மற்றும் துணை ஆளுநர் தீபக்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகர் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜராஜன் சிதம்பரம் மிட் டவுன் சங்க தலைவர் பிரகதீஸ்வரன் மற்றும் சிதம்பரம் மிட் டவுன் லோட்டரி சங்க செயலாளர் முனைவர் சின்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டு இதுவரை சிதம்பரம் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து மிஸ்ரிமல் மகாவீர்சந்த் அறக்கட்டளை சார்பில் சுமார் ஐந்து முகாம் நடைபெற்றது.


இதற்கு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூகம் மருத்துவத்துறை சார்பில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்த முகாமின் மூலமாக பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment