விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை உடனடியாக திறக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை உடனடியாக திறக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை  உடனடியாக திறக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் அலைபேசி அல்லது கணினி வாயிலாக விளைப் பொருட்களுக்கான ஏலத்தில் பங்கு கொள்ளாமல் வியாபாரிகள் புறக்கணித்ததால் கடந்த நான்கு நாட்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கவில்லை. இதனால் இது நம்பி 100க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது.


எனவே தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை உடனடியாக திறக்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ராஜேந்திரன் முன்னில வகித்தார். தொகுதி இணை செயலாளர் கங்காதரன் வரவேற்பு ஆற்றினார். விருத்தாசலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம், செ.சிவகுருநாதன் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கண்டன உரையாற்றினார்கள். தொகுதி துணைச் செயலாளர் பீட்டர் நன்றியுரை கூறினார். 


இதில் மணிகண்டன் தொகுதி துணைத் தலைவர் அஜித், சதீஷ், சுந்தரமூர்த்தி, வேல்முருகன், கொளஞ்சிநாதன், முத்து, கொளஞ்சி, முத்தரசன், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment