விருத்தாசலத்தில் குடிமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து குடியேறும் போராட்டம். பொது மக்கள் -காவல் துறையுடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

விருத்தாசலத்தில் குடிமனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து குடியேறும் போராட்டம். பொது மக்கள் -காவல் துறையுடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

விருத்தாசலத்தில் குடிமனை பட்டா வழங்க கோரி  வட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து குடியேறும் போராட்டம். பொது மக்கள் -காவல் துறையுடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளு


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முகுந்தநல்லூர்,கோ பொன்னேரி,ஊமங்களம், நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்தும் வரும்  ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தங்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் உடமைகளோடு 100 க்கு மேற்பபட்டோர் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் ஈடுப்பட்டனர்.,வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்ந்து அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டமும் நடைபெற்றுது.


இதனை காவல் துறையினர் தடுக்கு கட்டைகள் அமைத்து தடுக்க முயன்றபோது கிராம மக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பபட்டது. பின்னர் சார் ஆட்சியார் பழனி அவர்களின் பேச்சு வார்த்தைகள் பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு கருப்பையன் வட்ட செயலாளர் அசோகன் நகர செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர் வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன் ஜீவானந்தம் குமரகுரு சுந்தரவடிவேல் இளங்கோவன் ஜெயமணி அன்புச்செல்வி பெரியசாமி மாரிமுத்து அன்னம்மாள் செல்வகுமார் சக்கரபாணி நெல்சன் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/