கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, திடீரென விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்படும் என கூறியதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
மேலும் மாற்று திறனாளிக்கான சிறப்பு முகாம் மாதம் தோறும் மூன்றாவது புதன்கிழமை நடத்துவது வழக்கம் இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான முகாம் 3 பிரிவுகளாக நடத்தப்படும் அதில் குறிஞ்சிப்பாடி பண்ருட்டி கடலூரிலும் புவனகிரி காட்டுமன்னார்கோவில் சிதம்பரத்திலும் திட்டக்குடி நெய்வேலி விருத்தாசலத்திலும் நடைபெறுவது வழக்கம் ஆனால் விருத்தாசலத்தில் நடப்பதாக இருந்த மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் திடீரென கம்மாபுரத்தில் நடைபெறும் என அறிவித்ததால் பல்வேறு கிராமத்தில் இருந்து வரக்கூடியவர்கள் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும்.
மேலும் காலை 9 மணிக்கு வரவேண்டிய மாற்றுத்திறனாளிக்கான மருத்துவர் 11 மணி ஆகியும் வராததால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,மேலும் மாற்றுத் திறனாளிகள் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் டென்த் வசதிகள் இருக்கை வசதிகளோ குடிநீர் வசதிகளோ இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர், மாற்றுத்திறனாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments:
Post a Comment