ஆண்டிமடம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

ஆண்டிமடம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது...

ஆண்டிமடம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அன்பகம் சிறப்பு பள்ளியில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர்,மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர் இதில் அன்பகம் சிறப்பு பள்ளி தாளாளர் செல்வம் தலைமை தாங்கினார், லயன் சங்கத்தின் சார்பில் அம்மு செல்வம், நிர்மலா, தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாக்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அன்பகம் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி வரவேற்புரை நிகழ்த்தினார், நிறைவாக சிறப்பு பள்ளி ஆசிரியர் சுகந்தி நன்றி உரை நிகழ்த்தினார். 

No comments:

Post a Comment