வடலூரை மது மாமிசம் இல்லா நகரமாக அறிவிக்க கோரி வீர இந்து பேரமைப்பு சார்பில் மாபெரும்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்திலிருந்து வீர இந்து பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ச.காவி முத்துராஜ் அவர்கள் தலைமையில் வீர ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தொடங்கிய பேரணி இறுதியில் வடலூர் வள்ளலார் சபை பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.
பேரணியின் போது வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமியான வடலூர் நகரை மது மாமிசம் இல்லா மாநகரமாக அறிவிக்க கோரியும், அவர் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மற்றும் அவர் பிறந்த இடமான மருதூர் ஆகிய பகுதிகளில் மது மாமிசங்களை தடை செய்து புண்ணிய ஸ்தளங்களாக முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்
இந்நிகழ்வில் வீர இந்து பேராண்மைப்பின் மாநில பொருளாளர் முனுசாமி, கடலூர் மாவட்ட தலைவர் A.ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் K.செந்தில்குமார் , மாவட்ட துணைத்தலைவர் A.பாஸ்கரன் மாவட்ட செயலாளர் முருகன் மாவட்ட பொருளாளர் J.கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் V.பாலாஜி மாவட்ட இளைஞரணி செயலாளர் K.ராம்குமார் பழங்குடி மக்கள் விடுதலைக் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் துரை செல்வராஜ் மற்றும் அனைத்து கடலூர் மாவட்ட வீர இந்து பேரமைப்பு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வள்ளலார் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment