புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தில் நீர்நிலை ஓடை புறம்போக்கை பொதுப்பணித்துறையினர் பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றினர் !!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கரைமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை ஓடை சர்வே எண் 39/2. VKT/NH 45.C. சென்னை முதல் தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாகஆக்கிரமிப்பு செய்து நெல் பயிர் நடுவுநட்டு பயிர் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை ஓடை புறம்போக்கு நிலத்தில் நடுவு செய்யக்கூடாது என பலமுறை அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.
நிலம் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் புகார் அனுப்பி இருந்தனர் இதை எடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நீர்நிலை ஓடை புறம்போக்கில் பயிரிட்டு இந்த நெற்பயிரை சேத்தியா தோப்பு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் படைகாத்தான் பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் அசோக் குமார் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீனா உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் இவர்களின் தலைமையில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து நெல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை அகற்றினர்
மேலும் இப்பணியின் போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதுபோன்று பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உரிய நடவடிக்கை எடுத்து மிக விரைவில் அகற்றப்படும் என்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment