சேத்தியாத்தோப்பு அரசுப் பள்ளியில் கலைத்திருவிழா 2022-2023 போட்டிக்குச் செல்ல மாணவர்கள் பயிற்சித் தேர்வு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிப் பயிற்சி நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. மாவட்டத்தலைநகர் கடலூரில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கலைத் திருவிழாதனித் திறன் போட்டி நடைபெற இருக்கிறது.
அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்க கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில் அதை முன்னிட்டு இந்த சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கான பயிற்சி நடைபெற்று வந்தது. இதில் பரதம், நடனம், தனி நடிப்பு, பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, தனித்திறமைப் போட்டி போன்றவைகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து கடலூரில் நடைபெறும் மாணவர்களுக்கு இடையேயான போட்டிக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.
அதன் பொருட்டுஇந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, துணைத் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்க இவர்களுடன் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் டாக்டர்.ஆர். மணிமாறன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
No comments:
Post a Comment