சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலைப்பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ இருக்கை மற்றும் மேசைகள் வழங்கல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலைப்பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ இருக்கை மற்றும் மேசைகள் வழங்கல்.

சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலைப்பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ  இருக்கை மற்றும் மேசைகள் வழங்கல். 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள  எறும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி எம்எல்ஏ அருண்மொழிதேவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

எரும்பூர்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ அருண்மொழிதேவன் கலந்து கொண்டு மாணவர்கள் அமருவதற்கு ஏதுவாக இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்கி அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஏனைய திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். 


இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன்,  மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரமூர்த்தி, புவனகிரி மேற்கு ஒன்றியச் செயலாளர்  சிவப்பிரகாசம் , புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர்சீனிவாசன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் லட்சுமி நாராயணன், அதிமுக நிர்வாகி ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் எரும்பூர்செல்வராசு, வளையமாதேவி செல்வராசு, அண்ணா தொழிற்சங்கசண்முகம், அம்மா பேரவை பழனிச்சாமி, பாலசுப்பிரமணியம், ஐடிவிங் ராமராஜன் உள்ளிட்ட கட்சியினர் பலரும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ,பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளித் துணைத் தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment