ஸ்ரீமுஷ்ணம் கீழ் புளியங்குடி நியாய விலை கடை முன் பொதுமக்கள் முற்றுகை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

ஸ்ரீமுஷ்ணம் கீழ் புளியங்குடி நியாய விலை கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம்  கீழ் புளியங்குடி நியாய விலை கடை முன் பொதுமக்கள் முற்றுகை.


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் புளியங்குடி ஊராட்சி கீழ் புளியங்குடி நியாய விலை கடையில் அரிசி கோதுமை சமையல் எண்ணெய் சரிவர வழங்கவில்லை என்று கீழ் புளியங்குடி பொதுமக்கள் நியாய விலை கடை முன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.


பொதுமக்கள் கூறுகையில் கோதுமை சமையல் எண்ணெய் பிளாக்கில் விக்கிறதாகவும் கார்டு மூலமாக எங்களுக்கு எந்த பொருளும் வழங்கவில்லை என்றும் எங்கள் கைபேசிக்கு அனைத்து பொருளும் வாங்கின மாதிரி மெசேஜ் மட்டும் வருகிறது ஆனால் நாங்கள் அரிசி மட்டும் வாங்குகிறோம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment