மாநில அளவில் சிலம்ப போட்டிக் தேர்வாகியுள்ள வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

மாநில அளவில் சிலம்ப போட்டிக் தேர்வாகியுள்ள வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்

மாநில அளவில் சிலம்ப  போட்டிக் தேர்வாகியுள்ள வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். 


மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கடலூர் மாவட்டம் வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பயிலும் மாணவிகள் M.மகாலட்சுமி
J. நான்சி, R. காவியபிரித்யங்காரா
ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று மாநில அளவிலான நடைபெற உள்ள சிலம்பம் போட்டிகளில் கலந்துக்கொள்ள தேர்வாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணசெல்வி அவர்கள் மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவிகளுக்கு தங்களின் பள்ளி சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில் மாணவிகள் அனைவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றுள்ளனர் மேலும் அவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கும் சிலம்பப் போட்டிக்கு தேர்வாகி பள்ளிக்கும் பள்ளியில் பயிலும் இதர மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment