விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்க கோரி விருத்தாசலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் சார் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 9 November 2022

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்க கோரி விருத்தாசலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் சார் ஆட்சியரிடம் மனு.

விருத்தாசலம் அடுத்த தொரவளூர்  கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்க கோரி விருத்தாசலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் சார் ஆட்சியரிடம் மனு.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏரி கரை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 


இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வேப்பூர் பாசன பிரிவு உதவி பொறியாளர் மற்றும் நீர்வளத்துறை அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்பு இல்லாமல் குடும்ப வறுமையால் தவித்துக் கொண்டு வருகிறார்கள். 


எனவே இவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்குமாறும் மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் விருத்தாசலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் பூங்கோதை தலைமையில் சார்ஆட்சியர் பழனி அவர்களிடம் மனு அளித்தனர். உடன் கல்வியாளர் இ.கே.சுரேஷ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவச்செல்வி தென்றல் ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன் பாக்யராஜ் வழக்கறிஞர் தனபாண்டியன், வேலாயுதம் வேலுசாமி பூமாலை செந்தில் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment