கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு.


கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் மற்றும் திமுக கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்


கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், வருகின்ற 23.11.2022 புதன்கிழமை மதியம் 2.00 மணியளவில் வடலூர், மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது


இதனை தொடர்ந்து மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், ஒன்றியக்குழு தலைவர், நகர தலைவர், துணைத்தலைவர், பேரூர் தலைவர், துணைத்தலைவர், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகிய அணிகளின்  நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


மேலும் கூட்டத்தில் 27.11.2022 அன்று கழக இளைஞரணி செயலாளரும சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாகவும் நவம்பர் 26,27 சனி, ஞாயிறு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் குறித்தும் வாக்குச்சாவடி குழு அமைத்தல் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment