கடலூரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 20 November 2022

கடலூரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா.

மாவட்ட அளவிலான இந்த 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம்,  தலைமை தாங்கினார்.


உழவர் மற்றும் வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் 4765 பயனாளிகளுக்கு ரூ.25/-கோடி அளவில் நிதியுதவி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா, துணை மேயர் ப.தாமரைச்செல்வன்  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் என்.திலீப்குமார், ஆதி பெருமாள் சரக துணைப்பதிவாளர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், செயற்பதிவாளர்கள், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் தலைவர்கள் செயலாளர்கள், இதர கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டுறவாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment