காடுவெட்டியில் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரை அகற்றக்கோரி குரு கணலரசன் தலைமையில் மறியல் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

காடுவெட்டியில் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரை அகற்றக்கோரி குரு கணலரசன் தலைமையில் மறியல் போராட்டம்

காடுவெட்டியில் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய  நீரை அகற்றக்கோரி குரு கணலரசன்  தலைமையில் மறியல் போராட்டம்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  காடுவெட்டி பகுதியில் சென்னை  கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு சாலையில் மண்  குவிக்கப்பட்டு இருந்தது இதனால் அவ்வப்போது மழை பெய்த போது மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக அவ்வப்போது நெடுஞ்சாலைகளில் விபத்தும் ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்காக பெய்து வருகிறது இதனால் நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது இதனை அகற்றுவதற்கு பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியர்  இடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை திடீரென அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் காடுவெட்டி குரு அவர்களின் மகனும் குரு கணலரசன்   தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்னை கும்பகோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் செய்தனர் தகவல் அறிந்த மீன்சுருட்டி மற்றும் சோழத்தரம்  போலிசார்  மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவில்கள் அகற்றப்பட்டது பின்பு போக்குவரத்து இயக்கப்பட்டது இதனால் அப்பகுதியில்  பரபரப்பு காணப்பட்டவுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது


செய்தியாளர் கே.பாலமுருகன்

No comments:

Post a Comment