விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பு கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் வீணாகும் அவலம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 November 2022

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பு கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் வீணாகும் அவலம்

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பு கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் வீணாகும் அவலம்... 


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.  வெளியூர்களிலிருந்து தினசரி 1000க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர் மேலும் வெளியூர்களிலிருந்து வரக்கூடிய பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். 


குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல லட்சம் மதிப்பில் பெண்களுக்கான இலவச கழிப்பிடம் கட்டப்பட்டது, இது ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது மூடப்பட்டு இருக்கும் கழிப்பிடம் துர்நாற்றம் வீசுவதால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்களுக்கு இலவச கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment