புவனகிரி அருகே குடிநீர் தட்டுப்பாடு - அதிகாரிகளின் அலட்சியம் ; காலி குடங்களுடன் சாலை மறியலில் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 27 November 2022

புவனகிரி அருகே குடிநீர் தட்டுப்பாடு - அதிகாரிகளின் அலட்சியம் ; காலி குடங்களுடன் சாலை மறியலில்

குடிநீர் தட்டுப்பட்டால் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கிராமப் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து காலி குடங்களுடன்   சாலை மறியலில் ஈடுபட்டனர்!!!


கடலூர் மாவட்டம், புவனேரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக மின் மோட்டார் பழுதாகி சரி செய்ய படாத நிலையில் தொடர்ந்து குடிநீர் வராததால் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி விஜயரங்கன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞான குருசாமி ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் மேல்பவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் ஆகியோர்களிடம் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் இன்று அதிகாலை 6:00 மணி அளவில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு அரசுப் பேருந்தை சிறைப்படுத்தினர். 


தகவல் அறிந்து வந்த மருதூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பழுதான மின் மோட்டாரை இன்று மாலைக்குள் சரி செய்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலில் இருந்து விலக்கிக் கொண்டனர். 


இச்சாலை மறியலில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மங்கள லஷ்மி சிவலிங்கம் கற்பகம் ரவிச்சந்திரன் பாரதி சீலன் ஆகியோர்  பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் ஈடுபட்டது  குறிப்பிடத்தக்கது இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் நீடித்தது. 


புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல்


No comments:

Post a Comment