கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு 12 மையங்களில் 16 ஆயிரம் தேர்வர்கள் எழுதுகின்றனர் திட்டக்குடியில் இருந்து இரண்டு தேர்வர்கள் கடலூர் புனித வளனார் கலைக் கல்லூரியில் தேர்வு எழுத வந்திருந்தனர் ஆனால் அவர்கள் வழி தவறி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை புனித வளனார் பள்ளிக்கு சென்றனர் அங்கு அவர்களது நுழைவுச் சீட்டை சரிபார்த்த காவலர்கள் உடனடியாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் கலைக் கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அவர்கள் அங்கிருந்து பேருந்து நிலையம் வந்து மீண்டும் மற்றொரு பேருந்து மூலம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்தனர் அங்கிருந்து அவர்கள் தேர்வு எழுதும் மையத்தை கண்டுபிடிப்பதற்கு வழி தெரியாமல் திகைத்தனர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் ஊர்க்காவல் படை வீரர் ஜி வேலு அவர்களை விசாரித்தார் உடனடியாக அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றுக்கொண்டு புனித வளனார் கலைக் கல்லூரிக்கு சென்று அவர்களை சேர்த்தார் அவர்கள் 15 நிமிடம் தாமதமாக சென்றனர் இருந்தாலும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை விசாரித்தனர விசாரித்தனர்.
அப்பொழுது அவர்கள் வழி தெரியாமல் வேறு தேர்வு மையத்திற்கு சென்று திரும்பி வந்ததை அவர்கள் எடுத்துக் கூறியதால் தேர்வு எழுத அனுமதித்தினர் இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஊர்காவல் படை வீரர் ஜி வேலுவை வெகுவாக பாராட்டினர்
No comments:
Post a Comment