திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 27 November 2022

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு விருத்தாசலம் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடைவீதி, பாலக்கரை சந்திப்பு மற்றும் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடினார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் தண்டபாணி நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மற்றும் நகர மாவட்ட ஒன்றிய கிளை கழக, நகரமன்ற உறுப்பினர்கள்,  திமுக நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment