நீல உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 7 November 2022

நீல உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டம்.

நில உரிமை மீட்பு குறித்து தலித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நீல உரிமை மீட்பு குறித்து தலித் தலைவரின் ஆலோசனைக் கூட்டம் இன்று வடலூரில் உள்ள வள்ளலார் கூட்ட அரங்கில் அனைத்து மக்கள் சேவை இயக்க தலைவர்தங்க முருகன்  தலைமையில் நடைபெற்றது .


இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானத்தில் கூறியிருப்பதாவது  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு சாதி இந்துக்களிடம் இருந்து மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களையும் எந்த நிபந்தனையும் இன்றி அரசு உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி பட்டியல் இன மக்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை ஊராட்சி மன்றங்களில் உள்ள தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு உள்ளது போன்று தமிழக முதல்வர், பிரதமர் ஆகிய  பதவிகளிலும் சுழற்சி முறையில் கட்டாயம் இட ஒதுக்கீட்டை வழங்க முன்வர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமைகளையும் மண்ணு உரிமைகளும் தமிழக அரசு மீட்டுத்தர செவி சாய்க்காத பட்சத்தில் தலித்துகளுக்கு தன்னாட்சி பெற்ற தனி மாநிலம் என்ற  அடிப்படையில் தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் சேவை இயக்கம் மீட்டு தர பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாவட்ட செயலாளர் மருதூர் கே. வீரமணி மாவட்ட பொருளாளர் குறிஞ்சிப்பாடி ஞானமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் போராளி க.திருவள்ளுவன், சு.திருமாறன் வழக்கறிஞர்கள் அரியலூர் சசிகுமார் பொன்பரப்பி ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டை திருத்தமிழன் மற்றும் ஏழைகள் முன்னேற்ற கழகம் தலைவர் எம் ஏ டி அர்ச்சுனன் தேசிய மக்கள் கழகம் தலைவர் கலிய வீரமணி மக்கள் சேவை முன்னேற்ற கழகம் தங்கம் சிகாமணி சேப்பாக்கம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தின்  முடிவில் அனைத்து மக்கள் சேவை இயக்கம் மாவட்ட இளைஞரணி செயலாளர் தா வீரமணி நன்றி கூறினார்

No comments:

Post a Comment