சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 November 2022

சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு


சிறுநெசலூர் டாஸ்மாக் விவகாரம்: இன்று முதல் கடை மூடப்படும் என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவிப்பு


*நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில்* 


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை  இயங்கி வருகிறது,


இதன் மிக அருகில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு மாணவியர் விடுதி, அரசு பொது மருத்துவமனை, அரசு பத்திரப்பதிவு அலுவலகம், தேவாலயம், பிஎஸ்என்எல் அலுவலகம், மயானம் உள்ளிட்டவை இருப்பதாலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இருப்பதாலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதாலும் பள்ளி மாணவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அந்த மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், டாஸ்மாக் மேலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து ‌அரசியல் கட்சியினர் தரப்பில் மனு கொடுத்து வந்தனர்.


ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அந்தோணிசாமி தலைமையில் விருத்தாச்சலம் கோட்ட கலால் அலுவலர், வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது,


அதில் 15 நாட்களுக்குள் கடை மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.


மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் கொடுத்த காலக்கெடுவிற்குள் மதுக்கடையை அகற்ற வேண்டும் இல்லையெனில் நவம்பர் 6ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்  என்று பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் நவம்பர் 3 தேதி வேப்பூர் வட்டாட்சியர் மோகன் அவர்களிடம் மனு அளித்தார்.


அதனைத் தொடர்ந்து மீண்டும் இன்று வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் தங்கதுரை தலைமையில் வேப்பூர் வட்டாட்சியர் மோகன், காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இந்த பேச்சுவார்த்தையில் பாரதிய ஜனதா கட்சியின் நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிர்வாகிகள் பலர் பங்கு பெற்றனர்.


அப்போது டாஸ்மாக் மேலாளர் இந்த விவகாரம் தொடர்பாக முறையாக அப்புறப்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் முதற்கட்டமாக அந்த மதுக்கடைக்கு அருகில் உள்ள பார் மூடப்பட்டு உள்ளது என்றும், அப்பகுதியில் குடிமகன்கள் மது அருந்தாத வகையில் அங்கிருந்த முச்செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன, மேலும் 30 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்காத அனைத்து அரசியல் கட்சியினர் கூட்டத்தை புறக்கணித்து அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.


அப்போது அங்கு வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் இது குறித்து பேசி சுமுகமான முறையில் தீர்வு காணலாம் எனவும் சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், பின்னர் அங்கு வந்த டாஸ்மாக் மேலாளர் உடனடியாக இன்று முதல் மதுக்கடை மூடப்படும் என்று வாய்மொழியாக தெரிவித்துச் சென்றார்.


இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக பல அமைப்புகள் போராடியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பாரதிய ஜனதா கட்சியின் ஆறு மாத கால அயராத முயற்சியின் காரணமாக எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று வேப்பூர் கூட்ரோட்டில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்‌, நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்  சந்திரசேகர்,மகாராஷ்டிரா மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தென்னிந்திய பிரிவு ராஜா உடையார், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் ETM பழனிவேல், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் APR ரங்கராஜன், மங்களூர் ஒன்றிய நிர்வாகி ஏந்தல் மணி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சசிகலா செந்தில்குமார், விவசாய அணி ஒன்றிய தலைவர் மாளிகை ஆறுமுகம், 


ஒன்றிய பட்டியல் அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சீனிவாசன், ஒன்றிய மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி தங்க பிரகாசம்,OBC அணி மாவட்ட செயலாளர் ரேணுகா, ஒன்றிய துணைத் தலைவி சஞ்சலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, விக்ரம், ராஜேந்திரன், கடுகுராஜன், ஒன்றிய பொருளாளர் என் ஆர் செல்வகுமார், ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன்,

ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சசிகுமார், பாலச்சந்தர், ரவி, அதிரசம் மணி, மத்திய நலத்திட்ட பிரிவு நகர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்,


தேமுதிக நிர்வாகி செந்தில்குமார், பாமக நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி,

மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட துணை செயலாளர் தங்கதுரை, மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மஞ்ச முத்து, மங்களூர் ஒன்றிய செயலாளர் கோபி, நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் சேகர், இளையராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment