கடலூர் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2022

கடலூர் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்.

கடலூர் மாநகராட்சியில், ‘வருமுன் காப்போம் திட்டம்' சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் கடலூர் வண்டி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மேயர்,“கடந்த ஒரு வார காலமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.


தொடர்ந்து மழைக்காலம் என்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் எளிதாக தாக்கக்கூடும். ஆகையால்  இதுபோன்ற, 'வருமுன் காப்போம் மருத்துவ முகாம்' மூலம் சிறியோர் முதல் பெரியோர் வரை சிகிச்சை பெற்று நோய் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மழை நீர் தேங்கி  இருந்தால் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தேவையான குடிநீர், உணவு, மருந்துகள் குளிர்காலங்களில் பயன்படுத்தக்கூடிய போர்வைகள் வழங்க தயாராக உள்ணோம். மாநகராட்சி ஊழியர்களுடன் உங்கள் பகுதியில் உள்ளமாமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு இதை வழங்குவார்கள்" என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, நகர நல அலுவலர் அரவிந்த் ஜோதி  மாணவரணி துணை அமைப்பாளர் கே.எஸ். ஆர்.பாலாஜி உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment