விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் கல்லறை திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 November 2022

விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் கல்லறை திருவிழா.

விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் கல்லறை திருவிழா.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் சார்பில் இறந்தவர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில்  கல்லறை திருவிழா நடைபெற்றது. 


முன்னதாக கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்தவர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து வழிப்பட்டனர். மாலையில் பங்கு தந்தை பால் ராஜ்குமார் கலந்து கொண்டு  இறை நம்பிக்கையாளர்கள் விண்ணுலகை அடைய ஜபம் நடத்தி, வழிபாடு நடத்தினார். இதில் பங்கு பிரதிநிதிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறந்தவர்களை நினைவுகூறும் வகையில் கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி ஜப நீர் தெளித்து வழிபட்டனர்.  இதுகுறித்து பாத்திமா அன்னை ஆலய பங்குதந்தை பால் ராஜ்குமார் கூறும்போது நீதிமான்களின் ஆன்மா கடவுளின் கைகளில் உள்ளது. இறைவன் யாரை அன்பு செலுத்துகிறார்களோ அவர்களை வெகு விரைவாக அழைத்து கொள்கிறார் என்கிறது வேதம். நாமும் ஓரு நாள் இறப்போம். நமக்காக இந்த  சிலுவை ஜெபிக்கும். அதற்கான நல் வாழ்வை நாம் வாழ வேண்டும், என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை கிறிஸ்துராஜ் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment