விருத்தாச்சலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலமையில்கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

விருத்தாச்சலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் தலமையில்கிராம சபை கூட்டம்


விருத்தாச்சலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம். தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டார்.


நவம்பர் 01உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மு.பட்டி ஊராட்சியில் தமிழக அரசு அறிவித்தபடி இன்று கிராம சபை கூட்டம் சார் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தங்கள் ஆட்சியில் முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை மகளிர்க்காக செய்துள்ளதாகவும், குறிப்பாக பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுத்தது திமுக அரசு தான் என்றும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை 1989ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக அரசு தான் என்று பேசினார்.


மேலும் உள்ளாட்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் தலைமையிலான அரசு செய்து வருகிறது என்றும் அமைச்சர் பேசினார். மேலும் மு.பட்டி ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு 4.1/2 கோடி அளவில் திட்டங்கள் இந்த ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை மு.பட்டி ஊராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் பேசினார்.


கிராம சபை கூட்டத்திற்கு மு. பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகப்ரியா வசந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர்  ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இன்பா.

ஒன்றிய பெருந்தலைவர் மலர்முருகன், வட்டாட்சியர் தனபதி,  ராதிகா, திமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் ஆர்ஜிசாமி, ஒன்றிய இளைஞரணி தர்மா மணிவேல், பட்டி கருணாநிதி ஒன்றிய கவுன்சிலர் 12வது வார்டு நீலாவதி 

மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment