கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம் . - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம் .


கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம் .


கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெரியார் கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களும் தூய வளனார் கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களும் கலந்து கொண்டனர்.பெரியார் கலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு தின ஓட்டம் நிகழ்வு நடைபெற்றது .


இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதி வெங்கடேசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார் .இதில் வலிமையான பாரதம் வலிமையான மாணவர்கள் எனும் தலைப்பில் இந்திய சுதந்திரத்தின் பின்னால் ஏற்பட்ட நிலை குறித்தும் தற்போது இந்தியா உலக வல்லரசு ஆகும் நிலை குறித்தும் எடுத்துக்கூறி அதற்கு ஏற்ப மாணவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என தலைமை உரை நிகழ்த்தினார் .


சிறப்பு விருந்தினராக கா .கதிரவன் மாவட்ட மேற்பார்வையாளர் துணை இயக்குனர்  சுகாதார பணிகள் அலுவலகம் கடலூர் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களின் உடல்நலம் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலிமையான பாரதத்திற்கு ஒற்றுமையான செயல்கள் அவசியம் எனவும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார் முன்னதாக தூயவளவனார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவு இணை அலுவலர் ஜான் ராபர்ட்  வரவேற்புரை வழங்கினார் நிகழ்வின் இறுதியில் பெரியார் கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை இணை அலுவலர் மனோகரன் நன்றி உரை ஆற்றினார் .


இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதி வெங்கடேசன் கொடியசைத்து ஒற்றுமை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார் .முன்னிலையாக கதிரவன் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் கலந்து கொண்டார் .இந்நிகழ்வில் திரளான பேராசிரியர்கள் மற்றும் பெரியார் கலைக் கல்லூரி தூய வளனார் கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஒற்றுமை ஓட்டம் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கி 5 ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்திற்கு பின்னர் டேவிட் கோட்டையில் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment