வீட்டுமனை பட்டா வேண்டி வட்டாட்சியர் அலுவலகதில் உள்ளிருப்பு போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

வீட்டுமனை பட்டா வேண்டி வட்டாட்சியர் அலுவலகதில் உள்ளிருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி  மாவட்டம்  உளுந்தூர்பேட்டை  வட்டம்  வெள்ளையூர் கிராமத்தில் பூர்விக குடிகள் கலைகூத்தாடி நாடோடி சமூகமாக வாழ்ந்த மக்கள் சுமார் 30 வருடமாக கூடுவண்டிகளில் 16 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 

இவர்கள் அனைவரும் மழைகாலங்களில் மிகவும் சிரமபடுவதால்  இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி பகுஜன் சமாஜ் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சகோதரர் ஜுவன்ராஜ் தலைமையில் உளுந்தூர்பேட்டை  வட்டாட்சியர் அலுவலகதில் இன்று 10.11.2022  உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதின் பேரில் வட்டாட்சியர் தலைமையில்

அமைதி பேச்சுவார்த்தையில் வருகின்ற 12.11.2022ம் தேதியில் அனைவருக்கும் பட்டா வழங்குகிறேன் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதில் கடலூர்மேற்கு மாவட்ட தலைவர் அய்யாசாமி அவர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டதலைவர் ஆனந்தன் கடலூர் மாவட்ட பொது செயலாளர் பாக்யா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment