விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்.

விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம். 


பள்ளியின்  தலைமை ஆசிரியர் த பேசில்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சந்தோஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

 

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர்  சத்தியமூர்த்தி  அவர்கள் 6 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வும், போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பது  மற்றும் தீய பழக்கங்களை விடுவது குறித்த விழிப்புணர்வும், மாணவர்கள் படிப்பில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்ற விழிப்புணர்வும், மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்கள் தன்னை எவ்வாறு முழு தகுதியோடு தயார்படுத்துவது அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அதாவது சரியான மன நலம் குறித்த ஆலோசனைகள் பெறுவது குறித்து உரையாற்றினார். மேலும் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம் உட்கொள்ள மாட்டோம் என அனைத்து மாணவர்களும் ஒருமனதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் தமிழ் ஆசிரியை ஜெகன் ஜோதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment