காட்டுமன்னார்கோயில் அருகே பாலம் உடைப்பு 20 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

காட்டுமன்னார்கோயில் அருகே பாலம் உடைப்பு 20 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே பாலம் உடைப்பு 20 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே. எடையார்  கிராமத்திற்கு செல்லும் வழியில் மன வாய்க்கால் என்ற இடத்தில் காட்டுமன்னார்கோவில் எடையார் இணைக்கும் பாலம் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக  வேலை  நடைபெற்று வருகிறது 


தற்போது தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால்  கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகமாக வந்து தற்காலிக மனவாய்க்காலில் கட்டப்பட்டு  பாலம் கட்டம் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது


மேலும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வாய்க்கால் உள்ளே நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது அந்த பாலம் தற்பொழுது உடைந்து விட்டது 

இதனால் 20 கிராமங்களில் உள்ள  பொது மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது 


இந்த நிலையில் அதங்குடி  புளியங்குடி உடையூர் ஆழங்கா தான் இடையார் வவ்வால் தோப்பு ஆகிய கிராமங்களில் இருந்து வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் கர்ப்பிணி பெண்கள் காட்டுமன்னார்கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

உடனடியாக அந்த இடத்தில் தற்காலிக நடைபாதை பாலம் அமைக்க வேண்டும் என இடையார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் திடீரென பாலமுருகன் தலைமையில்  தண்ணீருள் இறங்கி நூதனப் போராட்டம் செய்தனர் உடனடியாக தற்காலிக பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் முறையான கட்டுமான பணிகள் முறையான கட்டுமான பணிகள் இல்லாததால் பொறியாளர்களை உடனடியாக மாற்றி விட்டு உடனடியாக வேலையை ஆரம்பிக்க வேண்டும் என முழக்கங்கள் இட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அமைக்கவில்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில்  மறியல் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது


செய்தியாளர் கே பாலமுருகன் 

No comments:

Post a Comment