கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் துவக்கி வைத்தார்.

கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் துவக்கி வைத்தார். 


புலனாய்வு குழுவில் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 10 காவலர்கள் பணியாற்றுவார்கள். இப்பிரிவினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதியப்படும் கொலை, ஆதாய கொலை, கூட்டு கொள்ளை, வழிப்பறி, சந்தேகமரணம், ஆள்கடத்தல், ஆயுதம், வெடிபொருள் சம்மந்தப்பட்ட வழக்குகள், ஜாதி மற்றும் மதம் மோதல்கள், இரண்டுக்கும் மேற்பட்ட விபத்து மரணம், பிரச்சனைக்குரிய சண்டை வழக்குகள் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை இப்பிரிவினர் புலனாய்வு மேற்கொள்வார்கள். 

காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் புலன் விசாரணை முடித்து உடனடியாக குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.


இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர்  குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment