கடலூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைமுன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

கடலூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைமுன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி

கடலூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கடலூர் வழியாக சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு ஆச்சாள்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அப்போது திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஏ கே ராஜா மனு அளித்தார் மனுவில் கூறியிருப்பதாவது கடந்த கால அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் எளிமையான முறையில் அதிக உற்பத்தி செய்யக்கூடிய மின் சக்கரம் (ஷீலாவில்), தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கியது மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைக்கால பராமரிப்பு தொகையாக ரூ4,000 வழங்கினார் அதை 5000 ரூபாயாக வழங்கியது.

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை கேள்விப்பட்டு தாங்கள் முதல்வராக இருந்தபோது நேரடியாக சென்று ஆய்வு செய்து குளத்தில் சுற்றுச்சுவர் அமைக்க ரூபாய் 2 கோடியே 62 லட்சம் ஒதுக்கியதற்கு நன்றி கூறியும், 


மேலும் மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம், தொட்டியம் மேடு, வேட்டையங்குடி, பன்னீர் கோட்டம், மாதானம், தாண்டாங்குளம் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் செய்து வைத்திருந்த பொங்கல் பானைகள் அடுப்புகள் தற்போது பெய்த கனமழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது எனவே மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் வழங்குவதற்கு தாங்கள் அரசுக்கு பரிந்துரை கோரிக்கை செய்ய வேண்டும் என்றும் அம்மனைவில் கூறப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் ஏராளமான திருநீலகண்டர் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment