கடலூர் மாவட்டம் வடலூர் குறிஞ்சிப்பாடி சாலை அய்யனேரி அருகே போர்வெல் போடுவதற்கு பயன்படுத்தப்படும் பைப்புகள் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது இந்த கடைக்கு எதிரே உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் தொங்கியபடி விபத்து ஏற்படும் வகையில் உள்ளது இதனால் அந்த தாழ்வான கம்பியை கழியை வைத்து முட்டுக் கொடுக்கக்கூடிய நிலை தொடர்கிறது தினமும் வாடிக்கையாளர்கள் பலர் அந்த தாழ்வான கம்பியின் கீழ் பயணித்து கடைக்கு சென்று வருகின்றனர் மழைக்காலங்களில் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது வடலூர் பகுதியில் பல மின் விபத்துகளால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 தேதி பெயிண்ட் அடிக்கும் வேலையில் பிரான்சிஸ் வயது 28 என்பவர் ஈடுபட்டபோது கட்டிடத்திற்கு அருகே தாழ்வாக சென்ற உயர்அழுத்த மின்கம்பியின் மீது தவறி விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது போன்ற பல விபத்துகள் வடலூர் பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது மின்துறை அதிகாரிகள் இதுபோன்று வடலூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment