இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம்

இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம்.


சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி என். எஸ். எஸ் சார்பில் இலவச பிஸியோதெரபி மருத்துவ முகாம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 


பள்ளி செயலாளர் இரத்தின. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மு. சிவகுரு முன்னிலை வகித்தார் ஆசிரியர் எஸ். ராஜவேலு வரவேற்றார். இளநாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எல். சுந்தரமூர்த்தி மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். உலக புகழ் பெற்ற ஜாக்கி வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பெற்ற பிஸியோதெரபி நிபுணர் டாக்டர் ஆர். வீரவேல் அவர்கள் மூட்டு வலிக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பிஸியோதெரபி சிகிச்சை அளித்தார். ஆர்த்தோ டாக்டர் ஆர். ஆனந்த்குமார் மற்றும் மருத்துவர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சி. பாலமுருகன், எம். தர்மராஜ், ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 66 பேர் பயன்பெற்றனர். ஆசிரியர் மு. கல்யாணராமன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment