சிறுநெசலூர் டாஸ்மார்க் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

சிறுநெசலூர் டாஸ்மார்க் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு

சிறுநெசலூர் டாஸ்மார்க் கடையை அப்புறபடுத்த கோரி பிஜேபி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் ஊராட்சியில் அரசு பள்ளி அருகில்  டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.


அதனால்  பள்ளிக்கு  மாணவர்களுக்கு இடையூராக குடிமகன்கள் உட்கார்ந்து மது அருந்துவது அசிங்கமாக பேசுவது என தொடர்வதால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அருவருப்பாக உள்ளனர்.


இதனால் அரசு பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அப்புறபடுத்த கோரி அனைத்து அரசியல் கட்சி சார்பில் கடந்த மாதம் போராட்டம் அறிவித்த நிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது 


அதில் நவம்பர்  4- ந் தேதி கடையை அப்புறபடுத்தபடும் என ஒப்புதல் கூறபட்டது. அதனை தொடர்ந்து முற்றுகை  போராட்டத்தை கைவிட்டனர் 


இந்நிலையில் இன்று  5- ந் தேதி கடையை அப்புற படுத்தாவிட்டால் 6- ந் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தபடும் பாஜக கடலூர் மேற்கு  மாவட்ட தலைவர் மருதை தலைமையில் வேப்பூர் வட்டாட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது மாவட்ட விவசாய அணி தலைவர் சண்முகம்,மகளிர் அணி மாவட்ட தலைவி ரேணுகா, நல்லூர் ஒன்றிய பொது செயலாளர் ஆறுமுகம், பெரியநெசலூர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment